எது தெய்வம்?

இந்த உலகில் மனிதர்களாகிய நம்முடைய சுபாவம் எப்படியென்றால், அன்றாடம் செய்கிற காரியங்களை எந்த கேள்வியோ, மறுப்போ இன்றி ஏற்றுக்கொள்வோம். ஆனால், வழக்கமல்லாத காரியம் என்றாலோ நமக்கு சந்தேகங்கள் வரும், கேள்விகள் எழும். அது என்னவென்று யோசித்து பார்க்கும்போதுதான் பல உண்மைகள் வெளிப்படும்.

Continue reading

நாம் ஏன் பிறந்தோம்?

இந்த பூமி தேவனால் படைக்கப்பட்டது. மனிதர்களாகிய நாம் அவருடைய மகிமைக்காக உருவாக்கப்பட்டோம். தேவன் நியமித்தக் காலம் வரை நாம் தேவனுக்கு மகிமை செலுத்தி இந்த பூமியில் வாழ்ந்து, காலம் வரும்போதோ அவரை சென்றடைவோம். தேவ சந்ததி உருவாவதற்காகப் படைக்கப்பட்ட மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டதால் தேவத் திட்டம் தகர்க்கப்பட்டு பூமி சபிக்கப்பட்டது. மனிதர்களிடையே பாவம் பெருகிற்று. அவர்கள் தேவனை மறந்தார்கள்.

தேவன் யார் என்பது அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படாததால் மனிதர்கள் தாங்களாக சில உருவங்களைப் படைத்து தங்கள் மனவிருப்பத்தின்படி தெய்வங்களை உருவாக்கிக் கொண்டார்கள். மனிதர்களைப் படைத்தது தெய்வமாகலாம். மனிதர்கள் படைத்தது தெய்வமாகுமோ? தேவன் காட்டின வழியை மறந்து மனிதர்கள் தங்களுக்கென்று பலப்பல வழிகளை ஏற்படுத்திக் கொண்டு மனம்போனப் போக்கில் வாழ்ந்ததினாலேயே உலகத்தில் இத்தனை வேதனைகளும், துன்பங்களும் உண்டாயின. அதன் விளைவாக பாவங்களும், சாபங்களும் வந்தன. இதை ஜனங்கள் உணராமலும், உணர்ந்தவர்கள் அவற்றிலிருந்து விடுபட வழி தெரியாமலும் இருக்கிறார்கள்.

தெய்வங்களைக் கற்பனையில் உருவாக்கியது போலவே பாவ, சாபங்களிலிருந்து விடுபடக் கற்பனை வழிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றால் விடுதலை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்கள் படைத்த தெய்வம் எப்படி உண்மையானதில்லையோ அப்படியே பரிகாரம் என்ற பெயரில் அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகளும் உண்மையானவை அல்ல. அவற்றினால் விடுதலை கிடைக்காது. உண்மையான தெய்வத்தை இனங்கண்டு கொண்டு அவர் காட்டிய வழிகளில் நடந்தால் மட்டுமே பாவ, சாபங்களிலிருந்து விடுதலை பெற முடியும். உண்மையான தெய்வம் எது என்று எப்படி அறிவது, அவர் காட்டிய வழி எது? தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

ஆதியிலே இந்த பிரபஞ்சத்தைப் படைத்த தேவன், பூமியை குடியிருப்புக்கேற்றபடிப் படைத்தார். மனிதனைத் தன் சாயலில் படைத்து, பூமியையும், பூமியிலுள்ள யாவற்றையும் ஆண்டுகொள்ள அதிகாரம் தந்தார். மனிதனோடு தேவன் உலாவி, அவனோடு பேசி உறவாடினார். ஆனால், சாத்தானால் மனிதன் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் தேவனோடு இருந்த தெய்வீக உறவை இழந்தான். தேவன் தனக்குத் தந்த மகிமையையும் இழந்தான்.

NYP-12

 

மனிதனைப் படைத்ததற்காக தேவன் மனஸ்தாபப்பட்டாலும் அவனை அழிக்க விரும்பாமல், தம் சித்தத்தை நிறைவேற்றத் தனக்கென ஒரு குறிப்பிட்ட ஜனத்தைத் தெரிந்து கொண்டார். இவர்களே இஸ்ரவேல் ஜனங்கள் எனப்பட்டனர். இவர்களுக்கென்று ஒரு தேசத்தைக் கொடுத்து செழிப்பாக வாழவைத்தார். ஆனால், இந்த உலகம் பாவ உலகமானதால் அவர்களும் பாவத்திற்கு அடிமையாகி தேவனை மறந்து, அவரை விட்டு விலகி துன்பத்தை அனுபவித்தனர். ஜனங்களின் துன்பங்களைக் கண்ட தேவன் அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி தமது பரிசுத்த ஆவியைக் கொண்டு இயேசுவை மனிதனாகப் பிறக்க வைத்தார்.

 

இயேசு மனிதனாக இந்த பூமியில் இருந்த நாட்களில் ஒரு மனிதன் எப்படியாக வாழ வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ அப்படியே வாழ்ந்தார். ஆனால், இஸ்ரவேல் ஜனங்களோ தேவன் காட்டிய வழியை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டதுமல்லாமல் இயேசுவையும் மறுதலித்தனர். எந்த ஜனங்கள் கெட்டுப்போகக் கூடாதென்று இயேசு பூமிக்கு வந்தாரோ அவர்களாலே பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் மரித்தார்.

 

மனிதனாக வாழ்ந்த போது மரித்து நான்கு நாட்களாகிப் போன மனிதனை உயிரோடு எழுப்பினவருக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். ஆனால், தேவனின் திட்டம் நிறைவேறத் தன்னை ஒப்புக் கொடுத்து, நம் பாவங்களை, சாபங்களைத் தான் ஏற்றுக் கொண்டு பாடனுபவித்து சிலுவையில் மரித்தார்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். மரித்த மனிதர்கள் யாரும் மீண்டும் உயிரோடு எழுந்ததில்லை. ஆனால், இயேசு தேவனானபடியால் உயிர்த்தெழுந்தார்.

 

சிலுவை மரணத்திற்குத் தான் ஒப்புக்கொடுக்கப்படுவதையும், மீண்டும் உயிர்த்தெழுவதையும் தம் சீடர்களிடத்தில் இவை நடப்பதற்கு முன்னதாகவே தெரிவித்திருந்தார். அதன்படியே மரித்துப் பின், உயிர்த்தெழுந்த அவர் இன்றும் ஜீவனோடு நம்முடனே இருக்கிறார்; நம் ஒவ்வொருவரோடும் இருக்கிறார். அவரே நமக்கு பாவப்பரிகாரியாக இருக்கிறார்.

 

நாம் நம்புகிறபடி பிற உயிர்களை பலியிடுவதோ, தான தர்மங்களை செய்வதோ, பாதயாத்திரை செல்வதோ அல்லது நதியில் மூழ்கி எழுவதோ பாவத்திற்கு பரிகாரமாகாது; அதனால் விடுதலை பெறவும் முடியாது. நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி இயேசுவே.

 

அதுபோல சாபங்கள் பல வழிகளில் வரும். சாபத்தினால் வியாதிகளும், வறுமையும், தோல்விகளும், சமாதானமற்ற நிலையும் வரும். இவற்றை நாம் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நிலை இல்லை. காரணம், இயேசு சாபங்கள் எல்லாவற்றையும் தான் ஏற்றுக்கொண்டு சிலுவையிலே அவற்றை ஜெயித்துவிட்டார். அதனால் அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நம் சாபங்கள் நீங்கும். பாவங்களை மன்னிக்கவும் சாபங்களைப் போக்கவும் அவருக்கு அதிகாரமும் வல்லமையும் உண்டு. மற்ற எந்த வழிகளிலும் பாவமோ சாபமோ நிவர்த்தியாவது இல்லை. இதுதான் உண்மை.

 

இயேசு ஒரு தாயின் பரிதவிப்போடு நம் எல்லோரையும் தம்மோடு சேர்த்துக் கொள்ள மனதாயிருக்கிறார். தான் படைத்த அத்தனை ஜனங்களையும் நரகத்திற்கு செல்லாமல் மீட்கக் காத்திருக்கிறார். நாம் நரகத்திற்குத் தப்பித்துக்கொள்ள ஒரே வழி இயேசுவை விசுவாசித்து ஏற்றுக் கொள்வதுதான். ஏனெனில், நம் மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை உண்டு. அது மோட்சமா நரகமா என்பது நியாயத்தீர்ப்பின் நாளிலே தீர்மானிக்கப்படும். இயேசு இரண்டாம் முறை பூமிக்கு வருவார். அவர் வரும்போது தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவரையும் தம்மோடு சேர்த்து மோட்சத்திற்கு அழைத்து செல்வார்.

“பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” என்று இயேசு சொல்கிறார் (ஏசாயா 45:22). அவர் எல்லோர்மேலும் இரக்கமுள்ளவராய் இருக்கிறார். கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவேல் 2:32) என்றும், இயேசுவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப்போ. 4:12) என்றும் வேதம் சொல்கிறது.

இதை உணர்ந்தவர்கள் அவருக்கு முன்பாக முழந்தாள்படியிட்டு இந்த சின்ன ஜெபத்தை ஏறெடுங்கள்:

“இயேசுவே! நீர் என் பாவங்களை, சாபங்களை ஏற்றுக்கொண்டு எனக்காக சிலுவையில் மரித்தீர், எனக்காக உயிர்த்தெழுந்தீர் என்பதை விசுவாசிக்கிறேன். நீரே என்னை இரட்சிக்கிறவர் என்பதையும் விசுவாசிக்கிறேன். என் பாவங்களை மன்னித்து உம் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும். என் வாழ்நாளெல்லாம் என்னோடு கூட இருந்து என்னை வழிநடத்தும். உம்முடைய வருகையில் என்னையும், என் குடும்பத்தாரையும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும். நீர் அப்படியே செய்வீர் என்று விசுவாசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே! ஆமென்!”

இந்த ஜெபத்தை செய்த உங்களுக்கு உங்கள் பாவங்கள் எல்லாம் நிச்சயமாக மன்னிக்கப்படும். மோட்சத்தில் மட்டுமல்லாமல் இந்த பூமியிலேயே இயேசு ஆண்டவர் உங்களோடு கூட இருப்பார். ஏனெனில், அவரோடு சேர்ந்து வாழவே நாம் படைக்கப்பட்டோம்.


– சகோதரி எமீமாள்