இரட்சிப்பு என்றால் என்ன?
இரட்சிப்பு என்றால் காப்பாற்றப்படுதல்.
எதிலிருந்து காப்பற்றப்படவேண்டும்?
சாதாரணமாக, ஆபத்திலிருந்து, தோல்வியிலிருந்து, இயலாமையிலிருந்து, மனிதர்களிடத்தில் அடிமையாக இருப்பதிலிருந்து, தீயப்பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.
வேதத்தின்படி, பாவத்திலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.
பாவம் என்று எதை சொல்கிறோம்?
தேவனுக்கு கீழ்படியாமல் இருப்பதும், தேவன் சொன்னதை மீறுவதும் பாவமாகும்
உதாரணம்: ஆதாம், ஏவாள் புசிக்கவேண்டாம் என்று சொன்ன பழத்தை புசித்து, தேவன் வைத்திருந்த ஒரு உன்னதமான திட்டத்தை குலைத்தார்கள். (ஆதி 2:9, 3:6, 3:11,17).
ஏன் இரட்சிக்கப்பட வேண்டும்?
ரோமர் 6:23 – பாவத்தின் சம்பளம் மரணம்
யார் பாவம் செய்தார்கள்?
ரோமர் 3:23 – எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானோம்.
யார் பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்?
இயேசு தான்.
ஆதாரம்: மத்தேயு 1:21, அப்போஸ்தல நடபடிகள் 4:12
ஏன் இயேசுவால் மட்டுமே இரட்சிக்க முடியும்?
இயேசு பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை – Iபேதுரு 2:22
அவரே பாவங்களை மன்னிக்க அதிகாரத்தை உடையவர் – மத்தேயு 9:6
யார் இரட்சிக்கப்படுவார்கள்?
கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவர்கள் – யோவேல் 2:32
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவர்கள் – மாற்கு 16:16
இயேசு எப்படி இரட்சிக்க முடியம்?
- ஏசாயா 53:5
- அவர் பாடு அனுபவித்ததால் பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை தப்புவிக்கிறார்.
- அவர் மரித்ததால் நம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைத் தாம் ஏற்றுக் கொண்டார்.
- அவர் உயிர்தெழுந்ததால் மரணத்தை ஜெயித்தார். அதனால், அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறார்.
நாம் இரட்சிக்கப்பட்டால்…
- பாவ மன்னிப்புப் பெற்றுக் கொண்டு தண்டனையிலிருந்து விடுதலை
- மேற்கொண்டு பாவம் செய்யாத, பாவமில்லா வாழ்க்கை
- முடிவிலே நித்திய ஜீவன்
- இம்மையில் சமாதானமான, ஆசீர்வாதமான வாழ்க்கை
- இயேசு தமது ஜீவனைத் தந்து சவதரித்த ஆசீர்வாதங்கள்:
- தண்டனை ஏற்றுக்கொண்டார் – நாம் மன்னிப்பு பெற
- காயப்பட்டார் – நாம் சுகம் பெற்றுக்கொள்ள
- பாவமானார் – நம்மை நீதிமானாக்க
- மரித்தார் – நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க
- வறுமையில் வாழ்ந்தார் – நாம் செழிப்படைய
- அவமானத்தை ஏற்றுக்கொண்டார் – நாம் அவருடைய மகிமையில் பங்கு பெற
- கைவிடப்பட்டார் – நம்மை தேவனோடு ஒப்புறவாக்க
- சாபமானார் – நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள
நாம் இரட்சிக்கப்படாவிட்டால்…
- பாவ வாழ்க்கையால், அழிவு
- பாவம் மன்னிக்கப்படாத்தால், ஆக்கினைத்தீர்ப்பு
- துன்பம் நிறைந்த நிச்சயமற்ற, தடுமாறும் வாழ்க்கை
- தோல்வி நிலை
- மரணம்