இதுவரை சிந்தித்ததுண்டா?

நமக்கு ஒரே ஒரு தாய் இருக்க, நாம் வணங்குவதற்கு  மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?

1. கர்த்தராகிய ஆண்டவர் ஒருவரே. இந்தியாவில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்?
2. உலகம் முழுமைக்கும் கர்த்தர் ஒருவரே ஆண்டவர். இந்தியாவில் வணங்கப்படும் தெய்வங்கள் ஏன் குறிப்பிட்டப் பகுதி மக்களுக்கு மட்டும் சொந்தமாக இருக்கின்றன? இதில் எந்த தெய்வம் மனிதனைப் படைத்தது?
3. இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது சரித்திரம். மனிதனால் உண்டாக்கப்பட்ட தெய்வங்களுக்கு சரித்திரம் எப்படி இருக்க முடியும்?
4. மரித்த இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். ஒரு வேடனின் அம்புப்பட்டு கண்ணன் மரித்ததாகக் கூறப்படுகிறது. அது தெய்வமென்றால் ஏன் உயிர்த்தெழவில்லை?
5. கர்த்தர் தாயைப் போலவும், தந்தையைப் போலவும் இருந்து மனிதனைப் பாதுகாத்து வாழ வைக்கிறார். மற்றவர்கள் செய்த துரோகங்களை மன்னிக்க வைத்து, மனிதனை சமாதானப் பாதையிலே நடத்துகிறார். தெய்வத்தின் துணை கொண்டு, மனிதன் தன் எதிரிக்கு ஏவல், பில்லிசூனியம் செய்கிறானே? தெய்வம் தீமை செய்யத் துணைபோகுமா? அல்லது தீமை செய்வது தெய்வமாகுமா?
6. கர்த்தர் மனிதன் மேல் இரக்கமுள்ளவராய், அவனுடைய பாவங்களை மன்னிக்கிறவராய் இருக்கிறார். தன்னைக் கொலை செய்தவர்களையும் மன்னித்தப் பெருந்தன்மையுள்ள தேவன் அவர். மனிதன் படைத்த தெய்வங்கள் ஏன் தனக்கு அவன் செய்த தவறுகளை மன்னிக்காமல் அவனைப் பழிவாங்குகின்றன? மனிதனுக்கு மனிதன் துரோகம் செய்து வாழ்கிறானே அதை ஏன் கண்டிப்பதில்லை?
7. கர்த்தர், மனிதன் தன்னை நோக்கிக் கூப்பிட்டபோதெல்லாம் பதில் கொடுக்கிற தேவனாக இருக்கிறார். அவர் உறங்குவதில்லை; உண்ணுவதுமில்லை, மனிதனுக்கு அவர் உணவு கொடுக்கிறார். தெய்வம் என சொல்லப்படுவது ஏன் உறங்குகிறது? ஏன் படையல் கேட்கிறது?
8. கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கி, மனிதனையும் படைத்தார். மனிதன் தன்னைப் படைத்தவரை தொழுதுகொள்கிறான். மனிதன் தானே படைத்த தெய்வங்களைத் தொழுதுகொள்கிறான். கல்லில் அடித்து உருவாக்குகிறபொழுது அதற்கு நோகாதோ? அதற்கு உயிர் கொடுப்பது யார்? தான் படைத்ததை சில நாட்கள் வணங்கிவிட்டு, பின்பு அதை அடித்து, உடைத்து கடலிலே தள்ளும்போது, அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் கரைகிறதே. தெய்வத்தை சாகடிக்கிறானோ?
9. மனிதனைப் படைத்தக் கர்த்தர் அவனைக் காப்பாற்றவும் வல்லவர். தன்னையே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத தெய்வத்திற்கு மனிதனை எப்படிக் காப்பாற்றத் தெரியும்?
10. கர்த்தரிடத்தில் ஒரு வார்த்தை சொன்னால் போதும், மனிதனுக்காக யாவையும் செய்துமுடிப்பார். மனிதனுடைய வாழ்க்கையில் தேவைகள் குறைவு, எளிமையான வாழ்க்கை. எத்தனை சடங்குகள், சம்பிரதாயங்கள்? அவை இடத்திற்கேற்ப, வசதிக்கேற்ப மாறும் சடங்குகள். என்னென்ன மூட நம்பிக்கைகள்? அர்த்தமற்ற சடங்குகள்? எத்தனை அலைச்சல்கள்? வீண் செலவுகள்? மனிதன் தானே தன் வாழ்க்கையை எப்படி சிக்கலாக்கிக் கொள்கிறான்?
11. தன்னை நம்பி வந்தவர்களைக் கர்த்தர் புறம்பே தள்ளுவதில்லை. கைவிடாது காப்பார். தெய்வமென நம்புவதும், அது தனக்கு எல்லாம் செய்யுமென்று எதிர்ப்பார்ப்பதும், மனிதன் அதன்மேல் வைத்த வெறும் நம்பிக்கை மட்டுமே. மனிதனால் தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்ள முடியாதபோது, அவன் படைத்தது அவனை எப்படிக் காப்பாற்றும்?
12. கர்த்தர் பரிசுத்தர். தான் படைத்த மனிதனும் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்பது கர்த்தரின் கட்டளை. பாவத்திற்கு மன்னிப்பு உண்டு. ஆனால், அதை நியாயப்படுத்த முடியாது. கொடியவனும் மனம் திரும்பி வாழ்வான். மனம் போன போக்கில் மனிதன் வாழ்ந்து பாவம் செய்கிறான்; அதை நியாயப்படுத்தவும் செய்கிறான். நல்லதுக்கு காலமில்லை, அக்கிரமத்திற்குதான் காலம் என்ற சொல் ஏன் நிலவுகிறது? பாவத்தைக் குறித்து பயமுண்டா?
13. மனிதன் கர்த்தரை அன்பு கொண்டு வழிபடுகிறான். வழிபடவில்லையென்றால், எங்கே தண்டித்துவிடுமோ என்ற பயம் கொண்டு வழிபடுகிறான்.
14. கர்த்தர் காட்டுவது சமாதான வழிகளே. கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் அன்பும், இரக்கமும், சகிப்புத்தன்மையும் கொண்டு பிறருக்காக ஜெபிப்பவர்கள். என்றாவது பிறருக்காக வேண்டிக் கொள்கிறானா? சகிப்புத்தன்மையும் இல்லாது, சுயநலத்தினால் எத்தனைத் தொல்லைகளைப் பிறருக்கு செய்கிறான்?

 

15. இப்படித்தான் வாழவேண்டும் என்று கர்த்தத்துவம் வரையறை செய்கிறது, குறிப்பாக பிறரை துன்புறுத்தாமல் நேசித்து வாழ சொல்கிறது. எப்படியும் வாழலாம். அவனுக்கென்று ஒரு நீதி நெறி இல்லை. இருந்தாலும் அதை பின்பற்றுவதில்லை. அவன் வகுத்ததே நெறி; அவன் வகுத்ததே சட்டம்.
16. கர்த்தர் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறார். தன் மக்களிடத்தில் அவர் வேண்டுவது எல்லாம் அன்பு ஒன்றையே. அவர் அவர்களிடத்தில் காட்டுவதும் அன்பு மட்டுமே. மனிதனை பயமுறுத்தும் கோலத்தில் உக்கிரகாளி, பத்ரகாளி எல்லாம் ஏன்? இவற்றை வழிபடுபவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?
17. கர்த்தர் மண்ணைக் கொண்டு தன்சாயலில் மனிதனைப் படைத்தார். மனிதன் மண்ணைக் கொண்டு தன் சாயலில் தெய்வத்தை உருவாக்குகிறான். கல்லும், மண்ணும் கடவுளாகுமா? கையின் சித்திரம் தெய்வமாகுமா?
18. மதம் என்று ஒன்று இல்லை; கர்த்தர் தெய்வம். அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் யாவரும் அவருடைய பிள்ளைகள். தன்னை ஏற்றுகொள்ளாதவர்கள் வழியில் தேவன் குறுக்கிடுவதும் இல்லை; அவர்களுக்குத் தீமை செய்வதும் இல்லை; அவர்களையும் கர்த்தர் நேசிக்கிறார். கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவிகொடுக்கிறவராக இருக்கிறார். மனிதன் தன் வசதிக்கென தன் விருப்பத்திற்கேற்றவாறு ஏற்படுத்திக் கொண்டவைகளே மதங்கள். தெய்வங்களுக்குள் எத்தனை பேதங்கள்? இந்த தெய்வத்தை வணங்கினால் அந்த தெய்வத்திற்க்கு பிடிக்காது; அந்த தெய்வத்தை வணங்கினால் இந்த தெய்வத்திற்கு ஆகாது; தெய்வங்களுக்கு ஒற்றுமை, சகிப்புத்தன்மை இல்லையோ?
19. ஒரே தெய்வம்; ஒரே வேதம்; அது உலகம் முழுமைக்கும் ஒன்றே. தேவன் சொன்னது தான் வேதம்; வேதம் தான் சத்தியம்; அந்த சத்தியம் தான் வாழ்க்கை. முரண்பாடுகளுக்கு இடமே இல்லை. எத்தனை எத்தனை தெய்வங்கள்? எத்தனை புனை கதைகள்? தான் வடித்த சிலையையும் வணங்குகிறான்; சிலை செய்ய உதவிய உளியையும் வணங்குகிறான்; தான் படைத்த எந்திரங்கள், வாகனங்கள், ஆயுதங்கள், அண்டா முதல் சொம்பு வரை எல்லாவற்றையும் வணங்குகிறான். பகுத்தறிவு படைத்த மனிதன் பகுத்தறிவு இல்லாத மிருகங்களையும் வணங்குகிறான். தெற்கில் மனைவியாய் இருக்கிற தெய்வம் வடக்கில் மகளாகிறது. இடத்துக்கேற்றாற்போல் வேறுபடுகிற தெய்வங்கள் மனிதனின் கற்பனைக்கேற்ப மாறும்.
20. கர்த்தர் உயிருள்ள தெய்வம். தன் மக்களைத் தானே சுமந்து செல்கிறார். மனிதன் தான் தெய்வத்தை சுமக்க வேண்டும்; எங்கே வைக்கிறானோ அது அங்கே இருக்கும், கோயிலில் வைத்தால் கோயிலில் இருக்கும்; குளத்தில் போட்டால் குளத்தில் கிடக்கும்.
21. மனிதன் மனிதன் தான், தெய்வமாக முடியாது. மனிதனும் தெய்வமாகலாம் மரம், செடி, கல், மண், மிருகம் எதுவும் தெய்வமாகலாம். மனிதரில் கொடியவனை மிருகம் என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்ட மிருகத்தைத் தான் தெய்வமென வணங்குகிறான்.
22. மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்படி இயேசு கிறிஸ்து குற்றமற்ற தன் இரத்தத்தை சிந்தித் தன்னையே பலியாகத் தந்தார். தெய்வம் எனப்படுபவற்றில் சில உயிரையே பலியாகக் கேட்டு மனிதனை பாவம் செய்ய வைக்கின்றனவே.
23. மனிதனுடைய எந்த கேள்விக்கும் வேதத்தில் பதிலுண்டு. வேதம் படிக்காமல் கர்த்தரைத் தொழுது கொள்ள முடியாது. எல்லா மக்களுக்கும் ஒரே வேதம் இருக்கிறதா? அதை எல்லோரும் படித்து அறிந்திருக்கிறார்களா? சாமவேதம் போன்றவை கூட இயேசுவே ஆண்டவர் என்று சாட்சி கூறுகிறது.
24. இயேசு கிறிஸ்து மனுஷக்குமாரனாக வந்தபோது செய்த அற்புதங்கள், அவருடைய ஊழியக்காரர்கள் மூலம் இன்றுவரையிலும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தெய்வங்களால் நடத்தப்பட்டவை என்று சொல்லப்படுகின்ற அற்புதங்கள் எல்லாம் கதைகளாகவே இருக்கின்றனவே, ஏன் வாழ்க்கையில் நடப்பதில்லை?
25. பாவங்களை மன்னிக்கவும், சாபங்களைப் போக்கவும் இயேசு ஆண்டவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; நிச்சயம் விடுதலை உண்டு. பாப, சாபங்களை அனுபவித்துத் தான் தீரவேண்டும். ஒரு விடுதலை என்பது இல்லாததினால்தான் மனிதன் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்கிறான். ஆனால், அவன் இதை அறியாமலும் உணராமலும் இருக்கிறான்.
26. மரணத்திற்குப் பின் மனிதர்கள் யாவரும் இயேசு ஆண்டவரிடத்தில் தான் சென்றாக வேண்டும். நியாயத்தீர்ப்பு அவருடையது. மரணத்திற்குப் பிறகு மனிதன் எந்த தெய்வத்திடம் செல்வான்? எது அவனை நியாயம் தீர்க்கும்? மனிதன் ஒன்றைப் படைக்கிறான் என்றால் அவனல்லவோ தெய்வம். அவன் படைத்ததை அவன் நியாயம் தீர்ப்பானா? அல்லது அவன் படைத்தது அவனை நியாயம் தீர்க்குமா?
27. இயேசு கிறிஸ்து ஆண்டவராக இருந்தபோதிலும், அவர் பூமியில் இருந்தபோது, மனிதர்களை நேசித்து, அவன் பாவம் செய்தபோது மன்னித்து, நல்வழிப்படுத்தினதும் அல்லாமல், மனிதனுக்கு முன் மாதிரியாக வாழ்ந்தும் காட்டினார். தன்னைக் காட்டிக் கொடுத்தவனை ‘சிநேகிதனே’ என்றழைத்தார், தன்னைத் துன்புறுத்திக் கொலை செய்தவர்களை மன்னிக்கும்படி பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்தார். இது சரித்திரம் சொல்லும் சாட்சி.

இயேசுவை தேவனென்று சாட்சி சொன்ன ஸ்தேவான் என்ற சீடனைக் கல்லெறிந்து கொன்றார்கள். அப்பொழுது அந்த சீடன் வேண்டினது, “ஆண்டவரே! இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும்”. இது வேதம் சொல்லும் சாட்சி.

ஆஸ்திரேலிய போதகரையும், அவரது இரு பிள்ளைகளையும் ஜீப்பிலே வைத்து உயிரோடு எரித்துக் கொன்றனர். இது ஒடிசாவில் ஒரு சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். போதகரின் மனைவியிடத்தில், அவரது கணவரையும் பிள்ளைகளையும் எரித்துக் கொன்றவர்களைக் குறித்துக் கேட்டபொழுது அதற்கு அவர் சொன்னது, “நான் அவர்களை மன்னிக்கிறேன்”. இது நம் கண்முன் நடந்த சாட்சி.

மனிதன் சாதித்தது தான் என்ன? தன் சக மனிதனை நேசிக்காமல் தன் சுயநலத்தால் அவனுக்கு எத்தனைத் துன்பங்களைத் தருகிறான்? தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக உத்தம மார்க்கத்தாரான போதகரையும், அவரது பிள்ளைகளையும் கொன்றார்களே அந்த குரூர மனபான்மை ஏன் வந்தது? எப்படி வந்தது? தன்னுடைய ஜீவனைவிடவே தனக்கு அதிகாரம் இல்லாதபோது, பிறருடைய ஜீவனை எடுக்க அதுவும், கொடூரமாகக் கொலைசெய்ய அவனுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வேதம் சொல்கிறது: துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரனின் இருதயம் பொல்லாப்பை செய்ய அவர்களுக்குள் துணிகரம் கொண்டிருக்கிறது.

பிரசங்கி 8 : 11

ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரம் இல்லை; மரண நாளின் மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்த போருக்கு நீங்கிப்போவதும் இல்லை; துன்மார்க்கரை துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

பிரசங்கி 8 : 8

சிந்தியுங்கள்! உணர்வடையுங்கள்!

விக்கிரகங்களைக் குறித்து வேதம் என்ன சொல்கிறது? அறிந்து கொள்ளுங்கள்.


– சகோதரி எமீமாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s