வேத மாணாக்கர் சபையார் கொண்டிருக்கிற கருத்துக்களில் சில

கருத்து:   இயேசு கடவுளல்ல, மத்தியஸ்தர் மட்டுமே, பிதாவினிடத்தில் மட்டுமே வேண்டிக்கொள்ள வேண்டும்.

விளக்கம்: இயேசு யார் என்று உணர்ந்துகொள்ள வழிகாட்டும் வசனங்களில் முக்கியமானவை:

வெளி. 1:8             =      வெளி. 4:8, 21:5-7
வெளி. 1:11           =      ஏசாயா 44:6
வெளி. 1:18           =      வெளி. 4:9,10,11
வெளி. 22:12         =      ஏசாயா 40:10
வெளி. 1:7             =      சகரியா 12:10
Iதீமோத்தேயு 6:15,16   =      வெளி. 17:14, 19:16
தானியேல் 7:9               =      தானியேல் 7:21, வெளி. 1:14

யோவான் 3:13, 8:26-28, எபி. 1:8,9 (சங்கீதம் 45:6,7),லூக்கா 4:34

இந்த வசனங்களையும் கவனியுங்கள்:

ஏசாயா 9:6ஆம் வசனத்தில் இயேசுவைக் குறித்து சொல்கையில் நித்தியப் பிதா, அதிசயமானவர், ஆலோசனை கர்த்தர் என்று கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள். இதில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவருமே வருகிறார்கள்.

இவைகளோடு சாமவேதம் கூறுவதையும் கவனியுங்கள். உத்ராக்ஷஹ காண்டம் 6ஆம் அதிகாரம், 7வது வாக்கியம்:

“உலகத்தை இரட்சிக்க இறைவன் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வெளிப்பட்டு, வானத்துக்கும் பூமிக்கும் நடுவே உபத்திரவப்பட்டு சபையை இரட்சிப்பார்”.


கருத்து:  I யோவான் 5:20-ல் இவரே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாயிருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது பிதாவைக் குறிக்கும்.

விளக்கம்: இந்த வசனத்தில் பிதாவையும், இயேசுவையும் குறிப்பதற்கு சத்தியமுள்ளவர் என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்கவும். யூதர்கள் பிதாவை ஏற்றுக்கொண்டிருந்தனர்; இயேசுவைத்தான் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலேயே அப்போஸ்தலர்கள் இயேசுவை அறிக்கை செய்தனர். அதன்படி இவரே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாக இருக்கிறார் என்பது இயேசுவையே குறிக்கும்.

யோவான் 3:16 = I யோவான் 5:11 = I யோவான் 5:20


கருத்துபரிசுத்த ஆவி ஆள்தத்துவமல்ல.

விளக்கம்: யோவான் 4:24ஆம் வசனத்தில் பிதாவானவர் ஆவியாயிருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆவியாயிருக்கிற பிதாவை ஆள்தத்துவத்தில் சேர்க்கும் பொழுது பரிசுத்த ஆவியை ஆள்தத்துவத்தில் சேர்க்காதது ஏன்?

மத்தேயு 10:20ஆம் வசனத்தில் ‘உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்’ என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். இதை உறுதிப்படுத்துகிற வசனங்களில் சில:

II சாமுவேல் 23:2, சங்கீதம் 143:10
அப். நட. 13:2
எபேசியர் 4:30, ஆகாய் 2:5

மேலும் பரிசுத்த ஆவி யார் என்பதை உணர்த்தும் சில வசனங்கள்:

மத்தேயு 28:20 = யோவான் 14:16,18,21 = யோவான் 14:23 = யோவான் 16:16,7
ரோமர் 8:26 = ரோமர் 8:34
I பேதுரு 1:11


கருத்துஅபிஷேகம், தீர்க்கதரிசனம் எல்லாம் அப்போஸ்தலர்களோடு முடிந்து போயிற்று.

விளக்கம்: கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பது தேவன் நமக்கு தந்த வாக்குத்தத்தம். தேவன் சொன்னதை யாராலும் மாற்றவோ மறுக்கவோ முடியாது.

அப். நட. 2:38-40
அப். நட. 10:44-46
I கொரிந்தியர் 14:1,3


கருத்து: வேதத்தை நன்கு படித்து புரிந்து கொண்ட பிறகு தான் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விளக்கம்: ஞானஸ்நானம் யார் எடுத்துக்கொள்ளலாம், எப்பொழுது எடுத்துக்கொள்ளலாம் என்று வழிகாட்டும் வசனங்கள்:

                        அப். நட. 2:36-41, 8:35-38, 22:10,16

மத்தேயு 28:20ஆம் வசனத்தில் சீஷர்களாக்குங்கள் என்று முதலாவதாகவும், ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இரண்டாவதாகவும், உபதேசம் பண்ணுங்கள் என்று மூன்றாவதாகவும் இயேசு கூறியிருக்கிறதை கவனிக்கவும்.


கருத்துஅற்புதங்கள், அடையாளங்கள் தற்காலத்தில் நடப்பது இல்லை.

விளக்கம்: இதைப் புரிந்து கொள்ள ஒரு வசனம் போதும்.

யோவான் 14:12


கருத்துநரகம் என்று ஒன்று இல்லை.

விளக்கம்: உண்மைதான். நரகம் என்ற ஒன்றை தேவன் மனிதர்களுக்காக ஏற்படுத்தவில்லை. ஆனால், அது யாருக்காக ஏற்படுத்தப்பட்டது, யார் யார்,எதனால் அதில் பங்கடைவார்கள் என்று விளக்கும் வசனங்கள்:

மத்தேயு 25:41
மாற்கு 9:43,44
வெளி. 20:10, 21:8


கருத்துஇப்பொழுது பாடுகிறப் பாட்டுகளைப் பாடக் கூடாது, தேவனுக்குப் புதுப்பாட்டுதான் பாட வேண்டும்.

விளக்கம்: இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணும்படி எபேசியர் 5:19-ல் கூறப்பட்டுள்ளது. பாடல்களின் மூலம் தேவன் மகிமைப்படுவார் என்பதை வேதத்தில் பார்க்கிறோம். தாவீது தேவனை மகிமைப்படுத்தினதெல்லாம் பாடல்களின் மூலம்தான். அவற்றின் மூலம் இயேசுவைக் குறித்ததானப் பல தீர்க்கதரிசனங்கள் வெளிப்பட்டன என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். வெளி. 14:3-ல் அந்த பாட்டு (புதுப்பாட்டு) அந்த 1,44,000 பேரைத் தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது என்று சொல்லப்பட்டுள்ளதையும் கவனிக்கவும்.


கருத்து:   காணிக்கை கொடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது; வாங்கிக்கொள்ளுங்கள் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை ஆதலால், காணிக்கை வாங்கக் கூடாது.

விளக்கம்: காணிக்கை கொடுங்கள் என்று சொல்லும்பொழுதே வாங்கிக் கொள்ளுங்கள் என்ற கட்டளையும் உள்ளடங்கிவிடுகிறது. வாங்கிக் கொள்பவர்கள் இல்லாமல் கொடுக்க முடியாதே. இதை உணர்த்தும் வசனங்கள்:

I கொரிந்தியர் 9:14
கலாத்தியர் 6:6
ரோமர் 12:13


கருத்து:   தசமபாகம் கொடுக்கக் கூடாது.

விளக்கம்: மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கட்டாயமாக்கப்பட்டிருந்த தசமபாகம் இயேசுவின் மரணத்திற்குப் பிறகு அது விருப்பக் காணிக்கையாக உள்ளது. நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டிருந்த காரணத்தினால் தசமபாகம் கூடாதென்றால் நியாயப்பிரமாணத்தில் உள்ள மற்றக் கட்டளைகளான என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்கிற அதி முக்கியமான முதலாம் கட்டளை முதற்கொண்டு எல்லாக் கட்டளைகளையும் விடவேண்டியதாயிருக்குமே.


கருத்துதேவனின் இரட்சிப்பின் திட்டம்.

விளக்கம்: அப்போஸ்தல நடபடிகள் 1:7 இதற்கு விளக்கம் தேவையில்லை, பொருள் வெளியரங்கமாக உள்ளது.


வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்றும் எழுதியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாம் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேதத்தில் உள்ளவற்றை உள்ளபடிப் புரிந்து கொள்ளாமல், மாற்றுக் கருத்துகளை உருவாக்கிக் கொண்டு நாமும் வழிவிலகி, மற்றவர்களையும் வழிவிலக செய்தோமானால், அது தேவக்கோபாக்கினைக்கு ஏதுவாகும். நம்முடைய ஊழியம் வேதத்தின் அடிப்படையில்தான் இருக்கவேண்டும். அதேசமயத்தில், வேத வசனங்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அப்படி சரியான முறைமையின்படி புரிந்துகொள்ள நாம் தேவனுடைய உதவியைத்தான் நாடவேண்டும். Iயோவான் 2:20,27ல் கூறப்பட்டுள்ளதன்படி நாம் பரிசுத்தரின் அபிஷேகம் பெற்றுக் கொள்வோமானால் அந்த அபிஷேகம் நம்மை தேவனை நோக்கி சரியானபடி வழிநடத்தும். அப்பொழுது நாம் தேவன் கட்டளையிட்ட ஒரே வழியைவிட்டு விலகாதிருப்போம். மாறுபட்டு நடந்தோமானால் மாறுபாடு உள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவே தேவன் இருப்பார்.

சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்


– சகோதரி எமீமாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s