தேவனை விட்டுப் பின்மாறிப் போனவர்களுக்கு

கிறிஸ்தவர்களில் சிறுபான்மையினர் பிறப்பிலேயே கிறிஸ்தவர்களாக உள்ளனர். பெரும்பான்மையினர் தான் வாழும் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களாக உள்ளனர். கிறிஸ்துவை எப்பொழுது ஏற்றுக் கொண்டவர்களானாலும் கிறிஸ்துவை அறிகிற முறைமையின்படி அறிந்துக்கொண்டவர்களாக இருந்தால் கிறிஸ்துவுக்குள் நிலைத்து நிற்கிறார்கள். அப்படியிராமல், கிறிஸ்துவைப் பற்றியோ கிறிஸ்தவம் பற்றியோ தெளிவான அறிவில்லாததினாலே உலக இச்சைகளால் இழுப்புண்டு பின்மாறிப் போகிறார்கள்.

பின்பாறிப் போகிறவர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்றால், அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிகக் கேடுள்ளதாய் இருக்கும் என்று வேதம் கூறுகின்றது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்; பின்வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிறியமாயிராது என்று கர்த்தர் கூறுகிறார்.

இப்படிப்பட்டவர்கள் நீதியின் மார்கத்தை அறிந்தப்பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்தக் கற்பனையைவிட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருந்தாலானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தப்பின்பு மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்களாயிருந்தால் பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை; நியாயத்தீர்ப்பு மட்டுமே உண்டு.

ஏனெனில், ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிப்பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல் வார்த்தையையும், இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசிப்பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப் படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கு ஏதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். இப்படிப்பட்டவர்கள் கொடிதான ஆக்கினைக்கு ஆளாவார்கள்.

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால், அசட்டைப்பண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனை அசட்டைப்பண்ணுகிறான். மேலும், மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தவும் செய்கிறான்.

அறியாமையுள்ள காலங்களை தேவன் கானாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷன் எல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

மனந்திரும்புவதற்கு தேவன் வாய்ப்பு தருகிறார்.

தேவன் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஆதலால் இப்பொழுதே மனந்திரும்புங்கள். இது குறித்து தேவன் சொல்லுகிறதாவது:

கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாய் இருக்கும். அதை சகிக்கிறவன் யார்? ஆதலால், நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும், உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எனக்கு செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்கு பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமல் போனால், அவனை நான் நியாயந்தீர்பதில்லை. என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாய்ந்தீர்க்கிறதொன்றிருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்.

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும் மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும் எது வரைக்கும் இருக்கும். நீங்கள் உங்கள் வழிகளை சோத்தித்து ஆராய்ந்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவீர்கள்.


– சகோதரி எமீமாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s